|
| ஜல்லிக்கட்டு நடத்த ரூ.25 லட்சம் காப்பீடு :நீதிபதி அறிவுறுத்தல் |
| மதுரை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 12:27 IST ) | |
ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சேர்த்து ரூ.25 லட்சத்திற்கு குழு காப்பீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனுக்கள் தலைமை நீதிபதி ஹெச்.எல். கோகலே, நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கே.மகேந்திரன், சதீஷ்பாபு ஆகியோர் ஆஜராகினர்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற கிளை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அந்த அனுமதியின்பேரில் ஜல்லிக்கட்டு நடந்த இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது எனவும், அதேபோல் இந்த இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கு தலைமை நீதிபதி கோகலே, ''ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சேர்த்து ரூ.25 லட்சத்திற்கு குழு காப்பீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கப்படும்'' என்றார்.
அதற்கு, குழு காப்பீடு குறித்து மனுதாரர்களிடம் ஆலோசனை செய்து தெரிவிப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|