|
| ஈழ தமிழர் பாதுகாப்பு: தமிழகத்தில் எழுச்சி பேரணி |
| வியாழக்கிழமை, 21 மே 2009 ( 12:07 IST ) | |
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா சபை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை வலியுறுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 4 மணிக்கு மக்கள் எழுச்சிப் பேரணி நடைபெறுகிறது.
இந்த பேரணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், நல்லகண்ணு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
போரில் இறந்தும் உடல் உறுப்புகளை இழந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள அதிபர் ராஜபக்சே, சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த எழுச்சி பேரணி நடைபெறுகிறது.
இந்த எழுச்சி பேரணியில் அனைத்துக் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|