யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெ‌ளி‌யீடு: சென்னையில் 92.06 சதவீதம் தேர்ச்சி
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 16:44 IST )
சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. செ‌ன்னை ம‌ண்டல‌த்‌தி‌ல் 92.06 சத‌வீத‌ம் தே‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகளை இணை செயலர் நாகராஜூ இன்று வெளியிட்டார்.

சென்னை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, மராட்டியம், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகம், கோவா, டாமன் டையூ, ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் இருந்து மொத்தம் 822 பள்ளிகளில் 54 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 49 ஆயிரத்து 711 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத‌ன் தே‌ர்‌ச்‌சி ‌‌வி‌கித‌ம் 92.06 சதவீதம் ஆகும்.

இதில் ஒரு பாடத்தில் மட்டும் 2 ஆயிரத்து 848 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் வருகிற ஜூலை மாதமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,433 பே‌ர் தோல்வி அடைந்து‌ள்ளன‌ர்.

தமிழக‌த்‌தி‌ல் மொத்தம் 5,783 பேர் தேர்வு எழுதியதில் 5,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத‌ன் தே‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் 95.02 சதவீதம் ஆகும். 2,411 மாணவிகள் தேர்வு எழுதியதில் 2,317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.10 ஆகும். 3,372 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3178 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.25 ஆகும்.

புதுச்சேரியில் 192 பேர் தேர்வு எழுதியதில் 178 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தே‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் 92.71 சதவீதம் ஆகும். 73 மாணவிகள் தேர்வு எழுதியதில் 70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 119 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 108 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விடைத்தாள்களை வாங்கி மறுமதிப்பீடு செய்ய ஒரு பாடத்துக்கு 100 ரூபாய் செலுத்தி விடைத்தாள் பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்று நாகராஜூ கூ‌றினா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புதிய தமிழகம் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் : கிருஷ்ணசாமி
ரா‌ஜி‌வ் நினைவு ஜோ‌தி: புது‌ச்சே‌ரி முத‌ல்வ‌ர் துவக்கி வை‌த்தா‌ர்
ராஜபக்சே மண்ணைக் கவ்வப்போவது கால‌த்‌தி‌ன் க‌ட்டாய‌ம் : விஜயகாந்த்
இல‌ங்கை‌யி‌ல் அமைதியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் : கருணா‌நி‌தி
பேரு‌ந்து க‌ட்டண‌ம் குறை‌ப்பு : கருணா‌நி‌‌தி ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி வழ‌க்கு
பிரபாகர‌ன் பாதுகா‌ப்பான இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறா‌ர் : வைகோ
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...