|
| புதிய தமிழகம் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் : கிருஷ்ணசாமி |
| சென்னை (ஏஜென்சி), 20 மே 2009 ( 15:43 IST ) | |
வீரத்தமிழர் பிரபாகரன் வீரமரணத்திற்கு வீர அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சி கொடி ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை வாழ் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் 35 ஆண்டுகள் போராடிய விடுதலைப்புலிகளின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனும், அவரது மகன் சார்லஸ் மற்றும் முக்கிய தலைவர்களும் போர்க்களத்தில் வீரமரணம் எய்தியதாக வந்துள்ள செய்தி வேதனையை தந்துள்ளது.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடி உயிர்நீத்த விடுதலைப் போராளிகளின் வரலாறுகள் ஆயிரம் ஆண்டுகள் போற்றப்படும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்கள் கண்ட கனவு நனவாகும்.
வீரத்தமிழர் பிரபாகரன் மற்றும் சார்லஸ் வீரமரணத்திற்கு வீர அஞ்சலி செலுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சி கொடியை ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அனைத்து கிளை பொறுப்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|