யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ராஜபக்சே மண்ணைக் கவ்வப்போவது கால‌த்‌தி‌ன் க‌ட்டாய‌ம் : விஜயகாந்த்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 14:01 IST )
அபலை தாய்மார்கள் இலங்கையில் அழுத கண்ணீர் வீண்போகாது எ‌ன்று‌ம் சிங்கள விமானநிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்கிய ராஜபக்சே மண்ணைக் கவ்வப்போவது காலத்தின் கட்டாயம் என்று‌ம் தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் இருந்து வரும் செய்திகளை நம்ப முடியவில்லை. ஏனெனில் அச்செய்திகளை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறது. ஒரு புறத்தில் விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உள்பட உயர்மட்ட தலைவர்களை கொன்றுவிட்டோம் என்று சிங்கள இனவெறி அரசு கொக்கரிக்கிறது. மறுபுறத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பிணங்களாக ஆங்காங்கே கிடக்கின்றனர் என்றும், பல்லாயிரக்கணக்கில் படுகாயமுற்று காடுகளில் அலைந்த வண்ணம் உள்ளனர் என்றும் செய்திகள் வருகின்றன.

ஹிட்லரை விட மோசமாக மகிந்தா ராஜபக்சே கடந்த 4 தினங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் தமிழர்களை சிங்கள ராணுவத்தின் மூலம் கொன்றுள்ளார். ஜனவரி 20ஆ‌ம் தேதி முதல் மே 7ஆ‌ம் தேதி வரை சுமார் 7 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. சபையே புள்ளி விவரம் தந்துள்ளது.

இந்த தமிழின படுகொலையை இன்றைய நவீன ஹிட்லர் மகிந்தா ராஜபக்சே அரசு நடத்திவிட்டு இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டேன் என்றும், தமிழர்களை எதிர்த்த இறுதிக்கட்ட போர் முடிந்துவிட்டது என்றும் கூறுகிறது.

மேலும், தமிழர்களுக்கு தான் உரிமையும், பாதுகாப்பும் அளிக்கப்போவதாகவும், உலகத்தை ஏமாற்ற தம்பட்டம் அடித்துள்ளார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். உலக நாடுகள் மூலம் ஆயுதங்களை வாங்கி குவித்துக்கொண்டும் சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் துணை கொண்டும் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை அறவே அழித்துவிட்டோம் என்று இன்று ஆர்ப்பரிக்கின்றனர்.

சிங்களர்களோ தங்களது வீடுகளிலும், பொதுக்கட்டிடங்களிலும் சிங்கள அரசின் கொடிகளை ஏற்றியும், தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் தங்களது கொடிகளை வீசிக்கொண்டும், ஊர்தோறும், தெருக்கள் தோறும் ஊர்வலம் வருகின்றனர்.

நம் சார்பாக நடைபெறும் இந்திய அரசு இலங்கையில் நடந்த தமிழின படுகொலையை தடுக்க தவறியது தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

அபலை தாய்மார்கள் இலங்கையில் அழுத கண்ணீர் வீண்போகாது. தமிழர்கள் சிந்திய ரத்தம் உறைந்து போய்விடாது. ஏனெனில் சிந்திய ரத்தம் என்றும் உறங்காது என்பது பொன்மொழி. கொல்லப்பட்ட தமிழர்களின் உயிர்கள் நிரந்தரமாக ஓய்ந்தும் விடாது. சிங்கள விமானநிலையத்தில் மண்ணைத் தொட்டு வணங்கிய ராஜபக்சே மண்ணைக் கவ்வப்போவது காலத்தின் கட்டாயம். தனிநாடு என்ற கோரிக்கையில் போர்முறைகள் மாறலாம், ஆனால் போர் ஓயாது என்பதை சிங்கள இனவெறியர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

இலங்கையில் நடந்த இந்த தமிழினப்படுகொலை கண்டித்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வரும் மூன்று நாட்களை துக்க தினங்களாக கடைபிடிக்கக் கேட்டுகொள்கிறேன். தே.மு.தி.க.வின் சார்பில் தமிழினப்படுகொலையை கண்டித்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு கழக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கட்சி தொண்டர்களை ‌விஜயகா‌ந்‌த் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இல‌ங்கை‌யி‌ல் அமைதியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் : கருணா‌நி‌தி
பேரு‌ந்து க‌ட்டண‌ம் குறை‌ப்பு : கருணா‌நி‌‌தி ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி வழ‌க்கு
பிரபாகர‌ன் பாதுகா‌ப்பான இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறா‌ர் : வைகோ
பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப்படவில்லை: கருணாநிதி கருத்து
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் தம்பிதுரை
இ‌ல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை க‌ண்டி‌த்து ‌திரா‌விட‌‌ர் கழக‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...