|
| இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம் : கருணாநிதி
|
| புதுடெல்லி (ஏஜென்சி), 20 மே 2009 ( 13:47 IST ) | |
''இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு தி.மு.க. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் கருணாநிதி நேற்று டெல்லி சென்றார்.
அவர் நேற்று மாலையில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரமும் வருமாறு:
கடந்த முறை தி.மு.க.வுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கிடைத்த அளவுக்கு 7 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது இப்போது தெரியாது. கிடைத்த பிறகுதான் வாய்ப்பு இருந்ததா இல்லாமல் போயிற்றா என்று என்னால் சொல்ல முடியும்.
பிரதமருடனும், சோனியா காந்தியுடனும் என்ன பேசப்பட்டது என்று கூற முடியுமா?
நாங்கள் பொதுவாக மத்தியில் இருந்த ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை எந்த அளவுக்கு அணுகுவது - எப்படி தீர்த்து வைப்பது என்பது பற்றியெல்லாம் பேசினோம்.
ராஜபக்சே தலைமையிலான அரசு, தமிழ் மக்களுக்கு சமஉரிமை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
இந்திய அரசு குறிப்பாக, பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இவர்கள் எல்லாம் அழுத்தந்திருத்தமாக அங்குள்ள தமிழர்களின் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்- சமநிலையிலே இலங்கையில் வாழ்கின்ற மக்கள், சிங்களவர்கள் ஆனாலும், தமிழர்கள் ஆனாலும் வாழவேண்டும், அதற்கான வழிவகைகளை காணவேண்டும் என்று கூறி வந்திருக்கிறார்கள். அதை மீண்டும் அவர்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறேன். பேச்சுவார்த்தையில் கூட சோனியா காந்தியிடமும், மன்மோகன் சிங்கிடமும் நினைவுபடுத்தியிருக்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் குடிமக்களுக்கு புதுவாழ்வு உருவாகிட நிவாரணங்கள் இவைகளையெல்லாம் செய்வதற்கு வேகமாக புதிய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், செயல்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர்களும் என்னுடைய கருத்தை ஆதரித்து நிச்சயமாக அந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.
தமிழ் ஈழம் அமைய இலங்கையில் வாய்ப்பு இருக்கிறதா?
தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றுதான் ஒரு விடுதலை இயக்கமாக ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் ஒரு இயக்கம் தோன்றியது. ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக தோன்றிய இயக்கம் இடையில் பல்வேறு திசைகளில் திரும்ப நேரிட்டு இன்றைய தினம் ஒரு கேள்விக்குறியாக ஆகியிருக்கின்றது. எதுவும் நடக்காமல் போய்விடும் என்று நினைக்க தேவையில்லை. நாம் உறுதியோடு மேற்கொண்ட முயற்சிகள் நிச்சயமாக வெற்றி பெறத் தவறுவதில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|