|
| பேருந்து கட்டணம் குறைப்பு : கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 13:41 IST ) | |
தேர்தல் விதிமுறைகளை மீறி பேருந்து கட்டணங்களைக் குறைத்ததற்காக, முதலமைச்சர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ''15-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் மே 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பாணை வெளியான ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
வாக்குப் பதிவுக்குச் சில தினங்கள் முன்னதாக, ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மாநகர பேருந்து கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று குறைக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், ஏ.சி. பேருந்துகளில் சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபடக் கூடாது. இந்த விதிமுறை மீறல் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழக தலைமைச் செயலரிடம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மே 3ஆம் தேதி விசாரணை நடத்தியது. அதன்பிறகு, பேருந்து கட்டண குறைப்பு திரும்ப பெறப்பட்டது.
ஆனால் தேர்தல் விதிமுறையை மீறி நடந்த செயலுக்காக முதலமைச்சர் மீதோ, ஆளுங்கட்சி மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நான் மீண்டும் கடந்த 4ஆம் தேதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தந்தி அனுப்பினேன்.
தேர்தல் விதிமுறையை மீறி நடந்துகொண்ட தலைமைச் செயலர், போக்குவரத்து செயலர், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|