|
| பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் : வைகோ |
| கோவை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 13:38 IST ) | |
பிரபாகரன் உயிரோடு, நலமுடன் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்றும் தொலைக்காட்சியில் காட்டப்படும் படங்கள் உறுதிப்படுத்தும் வகையில் இல்லை என்றும் ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைத் தீவில் 3.5 லட்சம் தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் மரணத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக கடந்த ஜனவரியில் இருந்து கூறி வருகிறோம்.
ஆனால், இலங்கை அரசும், மத்திய அரசும் 70 ஆயிரம் பேர்தான் இருப்பதாகக் கூறின. இப்போது 1.20 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா.வின் ஆய்வுக் குழு அப் பகுதிகளைப் பார்வையிடச் செல்கிறது என்பதால், இறந்தவர்களின் உடல்களை இலங்கை ராணுவத்தினர் பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலை கடலில் கரைத்துவிட்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காட்டுவதற்காக இலங்கை ராணுவம் திட்டமிட்டு இச் செயலைச் செய்துள்ளது.
பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் சென்றபோது சுட்டுக் கொன்றதாகக் கூறுவது, அவரை இழிவுபடுத்தும் செயலாகும். பிரபாகரன் உயிரோடு, நலமுடன் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். தொலைக்காட்சியில் காட்டப்படும் படங்கள் உறுதிப்படுத்தும் வகையில் இல்லை.
இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற பல்வேறு நாடுகளிடம் பயங்கர ஆயுதங்களை வாங்கிய இலங்கை அரசு, அவர்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது. புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு இந்திய கடற்படையின் உதவியே காரணம் என்று வைகோ கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|