|
| பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப்படவில்லை: கருணாநிதி கருத்து |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 11:19 IST ) | |
பிரபாகரனின் மரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத செய்தியாக உள்ளது என்றும் அதனால் உறுதிப்படாத ஒன்றை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை என்றும் முதலமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் கருணாநிதியிடம், பிரபாகரன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, பிரபாகரனின் மரணம் குறித்து கேட்டதற்கு, அது இன்னமும் உறுதிப்படுத்தப்படாத செய்தியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள - பிரபாகரனுடைய விடுதலை இயக்கத்தை ஆதரித்து பேசி வருகிற தலைவர்கள் இந்த செய்தி இலங்கை அரசு சொல்கின்ற பொய் என்று ஆணித்தரமாக மறுத்து இன்று கூட அறிக்கை விட்டு இருக்கிறார்கள். அதனால் உறுதிப்படாத ஒன்றை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார் கருணாநிதி.
பிரதமரிடம் இதைப் பற்றி பேசியபோது அவர் என்ன சொன்னார் என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் சோனியா காந்தியிடம் பேசியபோதும், பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பேசியபோதும் வலியுறுத்திக் கூறியிருப்பது, இலங்கை தமிழர்களுடைய பிரச்சனையில் மேலும் அழுத்தமான அக்கறை செலுத்தி போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இன மக்களைப் பாதுகாப்பதற்கும், அமைதியான வாழ்வு அளிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்வதாக சோனியா காந்தியும், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும் சொல்லியிருக்கிறார்கள். அவைகளைச் செயல்படுத்த வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன் என்று கருணாநிதி கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|