|
| எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் தம்பிதுரை |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 11:13 IST ) | |
நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து தம்பிதுரை தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
2004ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தம்பித்துரை போட்டியிட்டு பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்த தம்பிதுரை, சட்டசபை செயலர் எம்.செல்வராஜிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுக்க வந்தேன். அங்கு அவைத் தலைவர் இல்லை. எனவே அவரிடம் போனில் பேசினேன். சட்டசபை செயலரிடம் கொடுக்கும்படி அவர் கூறினார். எனவே கடிதத்தை செயலரிடம் சமர்ப்பித்து இருக்கிறேன். நான் ராஜினாமா செய்துள்ள பர்கூர் தொகுதியில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிடும் என்றார்.
ஒரே நபர் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள நிலைப்படி தொண்டாமுத்தூர் (மு.கண்ணப்பன்), கம்பம் (ராமகிருஷ்ணன்), இளையான்குடி (ராஜ கண்ணப்பன்), பர்கூர் (தம்பிதுரை) ஆகிய 4 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு தயாராக உள்ளன. மங்களூர் தொகுதியை ராஜினாமா செய்வதாக செல்வப்பெருந்தகை கொடுத்திருந்த கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை. அவரது கடிதம் ஏற்கப்பட்டால், மங்களூரும் காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|