|
| இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் |
| சென்னை ( ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 17:31 IST ) | |
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது." போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்... போரில் வீழ்ந்த ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் " என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது : இலங்கையில் சிங்கள ராணுவ வீரர்களின் கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இதில் பல போராளிகள் இறந்துள்ளனர்.பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது.
பிரபாகரன் சாகவில்லை. பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்.அவர் மரணம் அடைந்ததாக சொல்லும் அரசு, அவர் உடல் ஆதாரத்தை காட்டாதது ஏன்?
இலங்கையில் இறந்த போராளிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கிறோம்.இலங்கை அதிபர் ராஜபக்சே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்துள்ளார்.ராஜபக்சேயை போர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக நாங்கள் ஐ.நா.சபையை வலியுறுத்துகிறோம்'என்று வீரமணி பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|