|
| ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 17:28 IST ) | |
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்'என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுத்தினார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ''விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார்.
அது போலத்தான் இப்போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை.அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தேவைப்படுகிறது.உணவு, மருந்து, உடை இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதவிக்கிறார்கள்.அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பதில் பயன் இல்லை. இரும்பு கரம் கொண்டு இலங்கை அரசை இந்தியா அடக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|