|
| பிரபாகரன் மரணம் எதிரொலி: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009 ( 17:24 IST ) | |
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் போரில் மரணம் அடைந்ததாக வெளியான தகவலால் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பிற்காக தமிழகம் முழுவதும் 12 கம்பெனி (1000) துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு வந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 3 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை தூதரகம், மத்திய அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் சிறு குழுக்களாக நிறுத்தப்பட்டுள்ளார். கோவில்கள், வணிக வளாகங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் தலைவர்கள் சிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை இணை ஆணையர்கள் ரவி, ரவிகுமார், குணசீலன் ஆகியோரின் மேற் பார்வையில் நகர்முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.சந்தேகத்திற்கு இடமான நபர்களை சாதாரண உடையில் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் காவலர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.கடலோர பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தவிர்க்க, கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|