யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளி‌‌ன் உ‌ரிமையை கா‌‌ப்பா‌ற்ற நடவடி‌க்கை : தி.மு.க. ‌தீ‌‌ர்மான‌ம்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009   ( 13:16 IST )
இலங்கையில் வாழும் மிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தி.மு.க. செயற்குழு கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெ‌ற்றது. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதிஇளம் வழுதி, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்யடின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூ‌ட்ட‌த்‌தி‌ல் மத்திய அமை‌ச்ச‌ர்கள் டி.ஆர். பாலு, ராசா, அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி. மணி மற்றும் அமைச்சர்கள், வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தி.மு.க. மாவட்ட செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டன‌ர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றி வரும் சாதனைகளையும், தமிழ்நாட்டுக்கு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகளில் வழங்கி வரும் நன்மைகளையும் எண்ணிப்பார்த்து பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பெரும் வெற்றியை வழங்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.

தோழமையோடு இருந்த கட்சிகளில் சில கடைசி நேரத்தில் பொருந்தாத காரணங்களை சொல்லி பிரிந்து சென்றாலும் அதனை பொருட்படுத்தாமல் நம்மோடு இணைந்து நின்று போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் போட்டியிட இயலாவிட்டாலும் ஆதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதில் இடம் பெற்ற கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய இந்திய நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்கு காரணமான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டு தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி ஆகியோருக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனக்கு வந்துள்ள அபாயம் நிறைந்த உடல் நலிவுபற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் இருந்தே அரசுப் பணிகளையும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு, மாவட்டங்களில் தேர்தல் பணியாற்றியவர்களுடன் தொலைபேசி தொடர்பு என்று கடமையாற்றினார்.

தோழமை கட்சியாக இருந்த சிலர் பொருந்தாத காரணங்களை கூறி விலகினாலும் அதை அலட்சியப்படுத்தி மற்ற தோழமை கட்சிகளின் துணையோடு பிரசார திட்டங்களை செயல்படுத்தி மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட முதலமைச்சர் கருணாநிதியின் மகத்தான பணியை இந்த செயற்குழு பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியினர் தி.மு.க. மீதும், தி.மு.க. அரசு மீதும் பழி தூற்றி பிரசாரம் செய்தனர். முதலமைச்சர் கருணாநிதி நீண்ட தூரம் பிரசாரம் செய்து தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய முடியாத நிலையில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பிரசாரம் செய்த அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி எம்.பி., தெற்கு மண்டல செயலர் அழகிரி மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், தோழமை கட்சிகளின் தலைவர்கள், முன்னோடிகள், தொண்டர்கள் அனைவருக்கும் இந்த செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில் மத்தியிலே அமைய உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றி கலந்து பேசி முடிவு எடுக்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அதிகாரம் அளிப்பது என்று இந்த செயற்குழு முடிவு செய்கிறது.

1956 ம் ஆண்டு அண்ணாவின் காலத்தில் இருந்து இலங்கை பிரச்சனையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.இலங்கை தமிழர்களின் உரிமைக்காக பல்வேறு தியாகங்களை செய்து போராடி வருகிறது. சட்டசபையிலும் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.தமிழக அரசின் சார்பில் நன்கொடையாக வசூலிக்கப்பட்ட பணத்தில் இருந்து அப்பாவித் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆ‌ம் தேதி அதிகாலையில் இலங்கை தமிழர்களுக்காக தனது உடல் நிலையையும் பாராமல் முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதமும் இருந்தார்.

பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் சோனியாகாந்திக்கும், பிரதமருக்கும் நினைவூட்டல் கடிதங்கள் எழுதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இ‌வ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தோல்வி முடிவல்ல; வெற்றிக்கான ஆரம்பம் : சரத்குமார்
செ‌ன்னை‌யி‌ல் மின்சாரம் தாக்கி 5 பேர் பலியான சம்பவம் : 6 பேர் கைது
சகோதரரை மிரட்டியதாக தா.பாண்டியன் மீது வழக்கு
எனது தோல்விக்கு உள்கட்சி பூசலே காரணம் : தங்கபாலு
' பிரபாகரன் பற்றிய பொய் செய்திகளை நம்ப வேண்டாம் '
சென்னை: நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பலி
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...