யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
செ‌ன்னை‌யி‌ல் மின்சாரம் தாக்கி 5 பேர் பலியான சம்பவம் : 6 பேர் கைது
சென்னை( ஏஜென்சி), 18 மே 2009   ( 12:25 IST )
செ‌ன்னை தியாகராய‌ர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜுவல்லர்ஸ் கட்டடத்தில் மின்சார விபத்து ஏற்பட்டு 5 பேர் பரிதாபமாக இறந்தது டர்பாக 6 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

சென்னை தியாகராய‌ர் நகர் பனகல் பார்க் அருகே, நல்லி சில்க்ஸ் சார்பில் புதிய ஜுவல்லர்ஸ் ஷோரூம் அமைக்கப்படுகிறது. இதற்காக 3 மாடி கட்டடம் கட்டப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த 7 தொழிலாளர்கள், 3 வது மாடியில் நேற்று அதிகாலை சிமென்ட் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள் இரும்பு குழாய்களால் அமைக்கப்பட்ட சாரத்தின் மீது நின்று வேலை செய்தனர்.

வெளிச்சம் குறைவாக இருந்ததால், சாரத்தில் டியூப்லைட் கட்டி, அதற்கு 2வது மாடியில் இருந்து ஒயர் மூலம் மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.ஒயரின் ஒரு இடத்தில் துண்டாகி இருந்ததால், அந்த இடத்தில் ‘டேப்’ போட்டு இணைத்திருந்தனர். திடீரென டேப் விலகி மின்கசிவு ஏற்பட்டது.அப்போது, இரும்பு சாரத்திலும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் சாரத்தில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் வெங்கடேசன் (24), முருகன் (30), அய்யனார் (23), சதீஷ் (22), கார்த்திக் (21) ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.ஜான்சன் என்பவர் மட்டும் உயிர்த் தப்பினார்.

தகவல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் முத்துச்சாமி, உதவி ஆணைய‌ர் கண்ணபிரான் ம‌ற்று‌ம் காவல‌ர்க‌ள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இறந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாம்பலம் காவல‌்துறை‌யின‌ர் வழக்குப் பதிவு செய்து, கவனக் குறைவாக செயல்பட்டதாக கூறி பொ‌‌றியாள‌ர் பிரபாகரன் (37), மேஸ்திரி ரகு, உதவியாளர்கள் சரவணன், ரமேஷ், சாதிக், ஹர்சன் ஆகியோரை கைது செய்தனர்.

மின்வாரியம் விளக்கம் : இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து தமிழ்நாடு மின்வாரிய தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்‌பி‌ல், ''செ‌ன்னை தியாகராய‌ர் நகர் பனகல் பூங்கா அருகில், வணிக வளாக கட்டிடப் பணிக்காக, மின்வாரியத்திடம் இருந்து முறைப்படி தற்காலிக மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. அங்கு மின்சார விபத்து ஏற்பட்டது.

இதில், 5 பேர் உயிர் இழந்தனர். கட்டிடத்தின் உள்ளே மின் கம்பிகளை பயன்படுத்திய போதே விபத்து ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தின் மின் கம்பிகளுக்கும் விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை'' எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செ‌ன்னை‌யி‌ல் மின்சாரம் தாக்கி 5 பேர் பலியான சம்பவம் : 6 பேர் கைது
சகோதரரை மிரட்டியதாக தா.பாண்டியன் மீது வழக்கு
எனது தோல்விக்கு உள்கட்சி பூசலே காரணம் : தங்கபாலு
' பிரபாகரன் பற்றிய பொய் செய்திகளை நம்ப வேண்டாம் '
சென்னை: நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பலி
கருணாநிதியை சந்தித்தார் சிதம்பரம்
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...