|
| சகோதரரை மிரட்டியதாக தா.பாண்டியன் மீது வழக்கு |
| மதுரை ( ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 12:21 IST ) | |
பண்ணை வீட்டை காலி செய்யும்படி சகோதரரை மிரட்டியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியனின் குடும்பத்துக்கு சொந்தமான விவசாய பண்ணை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் உள்ள உத்தப்பநாயக்கனூரில் உள்ளது.இங்குள்ள வீட்டில் தா.பாண்டியனின் சகோதரர் சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று தா.பாண்டியனின் உறவினர் டி.என்.ராஜன் உள்பட 12 பேர் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று இந்த வீடு தா.பாண்டியனுக்கு உரியது என்றும், எனவே உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும் அங்கு குடிநீர் குழாயின் இணைப்பையும் உடைந்து எறிந்ததாக தெரிகிறது.
இது குறித்து சவுந்தரராஜன் உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், ''தா.பாண்டியன், அவரது சகோதரிகள் ராஜாமணிஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் ஆகியோர் தூண்டுதலின் பேரில் டி.என்.ராஜன் உள்பட 12 பேர் என் வீட்டுக்கு வந்து வீட்டை காலி செய்யும்படி மிரட்டினார்கள்.மேலும் நீர் குழாய் இணைப்பையும் துண்டித்தனர்' என்று கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் தா.பாண்டியன், அவரது சகோதரிகள் ராஜாமணி ஜேம்ஸ், பாலின்ஜெயராஜ், டி.என்.ராஜன் உள்பட 16 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|