|
| எனது தோல்விக்கு உள்கட்சி பூசலே காரணம் : தங்கபாலு |
| சென்னை ( ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 12:18 IST ) | |
தனது தோல்விக்கு உள்கட்சி பூசலும் ஒரு காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
சோனியா தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்கின் 5 ஆண்டு ஆட்சிக்கும், தமிழக முதல்வர் கருணாநிதியின் 3 ஆண்டு சிறப்பான ஆட்சிக்கும் மக்கள் வெற்றி கொடுத்துள்ளனர்.எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடவில்லை.
மத்திய, மாநில ஆட்சிகளை குறை சொல்ல முடியாததால், இலங்கை பிரச்னையை பிரசாரம் செய்தனர்.அதை மக்கள் ஏற்கவில்லை.இலங்கை பிரச்னையில் காங்கிரஸ் செய்த தியாகத்தை வேறு யாரும் செய்யவில்லை.நிலையான ஆட்சியை காங்கிரசால்தான் தரமுடியும் என்று மக்கள் வெற்றி தந்துள்ளனர்.
சில தொகுதிகளில், பல காரணங்களால் எங்கள் அணி தோல்வி அடைந்துள்ளது.இதெல்லாம் சகஜம்.பணநாயகம் வென்றுள்ளது என்று ஜெயலலிதா கொச்சைப்படுத்தி கூறியுள்ளார்.எங்கள் அணி பண நாயகத்தால் வென்றது என்றால் இவர்கள் எதனால் வென்றார்கள்? காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்ததால்,எல்லா தொகுதிகளிலும் பா.ம.க தோல்வி அடைந்துள்ளது.
எனது தோல்விக்கு உள்கட்சி பூசலும் ஒரு காரணம்.அத்துடன், கொங்கு பேரவை போட்டியிட்டு கணிசமான வாக்கை பெற்றதால் தோல்வி அடைந்தேன்.சோனியா, ராகுல், கருணாநிதி, கூட்டணி கட்சித் தலைவர்களின் பிரசாரத்தால் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது.பீகாரில் லாலுவின் ஆதிக்கம் தகர்ந்துள்ளது.அதேபோல் இடதுசாரிகள் கனவு சுக்குநூறாகி உள்ளன என்று தங்கபாலு கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|