|
| சென்னை: நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பலி |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009 ( 17:37 IST ) | |
சென்னையில் நள்ளிரவில் மின்சாரம் தாக்கியதில் கட்டடத் தொழிலாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகேயுள்ள நல்லி சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடையின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த கட்டடத்தில் நேற்றிரவும் வேலை நடைபெற்றது. நள்ளிரவு 12.30 மணி அளவில் மின் விளக்கிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சாரம் ஈரப்பதமாக இருந்த கட்டடத்தில் பரவியது. அப்போது, சுவரில் பூச்சுவேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், வெங்கடேஷ் (24), அய்யப்பன் (23), கார்த்திக் (22), சதீஷ் (22), முருகன் (22) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|