|
| ம.தி.மு.க.விற்கு ஈரோடு : அ.தி.மு.க.வினர் அதிருப்தி |
| ஈரோடு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 14 ஏப்ரல் 2009 ( 17:23 IST ) | |
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியை ம.தி.மு.க.விற்கு ஒதுக்கியதால் அ.தி.மு.க.வினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் முதல் ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்தது.கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 தொகுதியில் அ.தி.மு.க. வென்றது.
இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா வழங்கினார்.
தொகுதிப் பங்கீடுக்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் 4 முறை செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.பல பகுதியில் வேட்பாளர் பெயர் மட்டும் எழுதாமல் சுவர் விளம்பரங்கள் கூட எழுதிவைத்து விட்டனர்.இது இப்படி இருக்க ஈரோடு தொகுதி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
ம.தி.மு.க. வேட்பாளராக கணேசமூர்த்தியை வைகோ அறிவித்த நிலையிலும், தொகுதி தங்கள் கையை விட்டுப் போனதால் ஈரோடு அ.தி.மு.க.வினர் தேர்தல் பரபரப்பின்றி சோர்வாகவே காணப்படுகின்றனர்.இதனால் ம.தி.மு.க.வினருக்கு மனதளவில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| விளையாட்டு - மலேசியாவில் உள்ள இபோவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா சர்வதேச ஹாக்கி கோப்பையை இந்தியா 13 ஆண்டுகளுக்கு பிறகு வென்று சாதனை படைத்துள்ளது... |
| |
|
|
|
|
 | | | அயன் - விமர்சனம் | | கடத்தலும், காதலுமாக செல்லும் பட்டத்தாரி வாலிபனின் கதை.புத்திசாலித்தனமான காட்சிகளால் சில இடங்களில் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் கே.வி.ஆனந்தும், சுபாவும்... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|