|
| இலங்கை : இந்திரா போன்று சோனியா செயல்பட கருணாநிதி வேண்டுகோள் |
| சென்னை(ஏஜென்சி), 10 ஏப்ரல் 2009 ( 13:03 IST ) | |
" எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே " என்று சோனியா காந்தியை பார்த்து தாம்கேட்டுக் கொள்வதாக கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போரை நிறுத்த சோனியாவின் குரல் இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற தமிழர் பேரணியின் முடிவில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடந்த கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்ட் பேசியதாவது:
இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் வழிசொல், வழிசொல் என்று எனக்கு ஆணையிட்டு இருக்கிறார்கள்.எவ்வழியை நான் கண்டுபிடித்து சொல்வதென்று புரியாத நிலையில் குழம்பி தவிக்கிறேன்.
நானும் பேராசிரியரும் இந்த இலங்கை பிரச்சினைக்கு எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்தோம் என்று இங்கே திருமாவளவன் குறிப்பிட்டார். ஆனால், இப்போது சில பேர் ஏன் இலங்கை பிரச்சினைக்காக ஆட்சியை துறக்க கூடாது என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சியை துறக்காமல் இருப்பதற்கு காரணம், எனக்காக துறக்காமல் இல்லை, கேட்பவர்களுக்காகத்தான் ஆட்சியை நான் துறக்காமல் இருக்கிறேன்.
நான் மாநில ஆட்சியை துறந்து, மத்திய அரசு, நேரடியாக தமிழகத்தை ஆளுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்குமேயானால்-குடியரசு தலைவருடைய ஆட்சி நேரடியாக ஏற்பட்டிருக்குமேயானால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகளுக்கு, இறையாண்மைக்கு விரோதமாக, திருமதி சோனியா காந்தியை இழித்தும் பழித்தும் பேசுகின்ற இந்த பேச்சுகளுக்கு எத்தனை ஆண்டுக்காலம் சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என்பதையெல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். எனவே இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் நான் ஆட்சியை இழக்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இது ஒரு நிலை. இன்னொரு நிலை-இன்றைக்கு செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டிருக்கிறார்களே, நச்சுப்புகை குண்டுகளை வெடித்து நம்முடைய இனத்தை அழிக்கிறார்களே, இன்னும் இதைப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று புலம்புவது எனக்கு புரிகிறது. அந்த புலம்பலின் தாத்பரியம் என்னைப்போல் எல்லோருக்கும் இருப்பதையும் நான் உணருகிறேன்.
இன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே போர் நிறுத்தப்பட வேண்டுமென்று உரக்க ஒலிக்கின்றன.நம்முடைய இந்திய பேரரசும் நம்முடைய குரலை மதித்து, கோரிக்கையை மதித்து போரை நிறுத்த வேண்டுமென்று கேட்கிறது.அந்த குரல் இன்றைக்கு சோனியா காந்தியின் குரலாக ஒலிக்கிறது.
நாம் விரும்புவது, திருமாவளவன் போன்றவர்கள் விரும்புவது, அது திருமதி இந்திரா காந்தியின் குரலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மாமியாரின் குரலை மருமகள் பின்பற்ற வேண்டுமானால் மற்ற நாடுகளின் நிலைமைகளை, மாமியார் காலத்திலே இருந்த உலக நிலவரம் இன்று மருமகள் காலத்திலே இருக்கின்ற உலக நிலவரத்தையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு இந்தியாவிற்குள் இருந்து குறிப்பிடத்தக்க உதவி... |
| |
|
|
|
|
 | | | அடடா என்ன அழகு - விமர்சனம் | | மலையிலிருந்து கீழே விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது... |
| |
|
|
|
|
|
|