யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பாமக அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா?
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 24 மார்ச் 2009   ( 12:43 IST )
பாமவின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, ரயில்வே இணை அமைச்சர் வேலு ஆகியோர் ன்று தங்களது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்ற வேலைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாமக தனது கூட்டணி குறித்து இதுவரை எந்த உறுதியான முடிவும் அறிவிக்கவில்லை.மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியில் பாமக நீடிக்கிறது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும், பாமக தரப்பில் இருந்து பதில் இல்லை. நாளை மறுநாள் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கிடையே, பாமகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு ஆகியோர் இன்று தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இன்று பிற்பகல் நேரில் சந்தித்து இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை மறுநாள் கட்சியின் பொதுக்குழு கூடி, கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ள நிலையில் பாமக அமைச்சர்கள் ராஜினாமா செய்யப்போவதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தொகுதி பங்கீடு 2 நாளில் அறிவிப்பு : கருணாநிதி
ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்தபோது க‌‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்காதது ஏ‌ன் ? : ஜெ.வு‌க்கு கருணாநிதி கே‌ள்‌வி
10 ‌ம் வகு‌ப்பு தேர்வு நாளை தொடங்குகிறது
கூட்டணி அறிவிப்பு: 26-ல் வெளியிடுகிறது பாமக
நெ‌ல்லை‌யி‌ல் சர‌த்குமா‌ர்; ‌சிவ‌கங்கை‌யி‌ல் ரா‌திகா போ‌ட்டி
கா‌ங்‌கிர‌ஸ் அ‌ணி‌யி‌ல்தா‌ன் பா.ம.க. உ‌ள்ளது : த‌ங்கபாலு
செய்திகள்
தமிழகம் - வரு‌ம் ம‌க்களவை‌த் தே‌ர்‌த‌லி‌ல் பா.ஜனதாவுட‌ன் அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி கூ‌ட்ட‌ணி வை‌த்து‌ போ‌ட்டி‌யிடு‌கிறது எ‌ன்று‌ம், நெ‌ல்லை‌யி‌ல் தானு‌ம், ‌சிவ‌க‌ங்கை‌யி‌ல் ரா‌திகாவு‌ம் போ‌ட்டி‌யிடுவதாகவும் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் சர‌த்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
1977 - விமர்சனம்
கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!...
யாவரும் நலம் - விமர்சனம்
தீ – விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன...
மேலும் படிக்க|மேலும்...