|
| போர்க்களமானது சென்னை உயர்நீதிமன்றம் : போலீஸார் - வக்கீல்கள் மோதல் |
| சென்னை (ஏஜென்சி), 19 பிப்ரவரி 2009 ( 18:46 IST ) | |
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களும், போலீஸாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நீதிபதி காயமடைந்தார். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகமே போர்க்களமாக மாறியது.
சுப்ரமணியசாமி மீது முட்டை வீசிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 வழக்கறிஞர்கள், இன்று மதியம் நீதிமன்றத்தில் சரண்டைய வந்தனர். அப்போது,அந்த வழக்கறிஞர்களில் ஒருவர் முதலில் சுப்ரமணியசாமிக்கு எதிராக தாம் கொடுத்துள்ள புகாரில் அவரை கைது செய்துவிட்டு , பின்னர் எங்களை கைது செய்யுங்கள் என்றார்.
இதனால் காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இது மோதலாக முற்றியது.இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
வழக்கறிஞர்கள் கல்வீச்சில் இறங்கியதாகவும், அதனால் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.இம்மோதலில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த நீதிபதிகள் குழுவினர் மீதும் கல்வீச்சு நடத்தப்பட்டது.இதில் நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தனுக்கு காயம் ஏற்பட்டது.இதனால், இந்த மோதலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த வழக்கறிஞர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தாக்குதல் சம்பவத்தால், சென்னை உயர் நீதிமன்ற வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டு,தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி முகோபாத்யாயா, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றப்பட்டனர். இருந்தாலும் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், அல் - கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வசித்து வருவதாக விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
 | | | 'நான் கடவுள்' - விமர்சனம் | | இயக்குனர் பாலாவின் 4-வது படம் 'நான் கடவுள்'. யாரும் தொட்டிராத களம், கற்பனை செய்யாத கதாபாத்திரங்கள் என பாலாவின் அடையாளம் இதிலும் உண்டு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆலிவ் எண்ணெய் மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அருமருந்து என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பு மற்றும் கிரனடா பல்கலைக்கழகம்... |
| |
|
|
|
|
|
|