யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அதிகார துஷ்பிரயோகத்தின் வெற்றி: ஜெ.
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 16:48 IST )
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணபலம் வென்றது; ஜனநாயகம் தோற்று விட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

திமுகவின் பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.

கடந்த 7ம் தேதிக்கு மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியில் இருக்கக்கூடாது; தொகுதியை விட்டுவெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால், அதன் பின்னரும் திமுக அமைச்சர்கள் மற்றும் அழகிரியின் ஆட்கள் தொகுதிக்குள்ளேயே வலம் வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் 7ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகும் பணம், தங்க நாணயம் மற்றும் விலயுயர்ந்த பொருட்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

அழகிரியின் அடியாட்களால் வாக்காளர்கள் அனைவரும் மிரட்டப்பட்டனர். இதுகுறித்து அதிமுக சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

9ந் தேதி தேர்தல் முடிந்தவுடன் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என அழகிரி அன்றே அறிவித்தது; திருமங்கலம் இடைத்தேர்தல் நல்ல செய்தியைத் தரும் என கருணாநிதி சென்னை சங்கமம் விழாவில் அறிவித்தது; வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக திமுகவினர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டது ஆகியவற்றில் இருந்தே இந்த இடைத்தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்
தேர்தல் முடிவு: சரத்குமார் கருத்து
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு
தாக்கத்தை ஏற்படுத்தாத சமத்துவ மக்கள் கட்சி
கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...