யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திமுகவின் வெற்றி ஓர் மாயை: விஜயகாந்த்
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 16:40 IST )
திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, வெறும் மாயை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற ஓர் தேர்தல். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே, இந்த இடைத்தேர்தல் பீகாரையும் மிஞ்சிவிட்டது என்று கூறியுள்ளார்.

ஜார்க்கண்டில் மாநில முதல்வரே தேர்தலில் தோல்வியடைந்தார். அந்த அளவுக்கு அங்கு தேர்தல் முறையாக நடைபெற்றுள்ளது.

ஆனால் அமைதிக்கும், நாகரிகத்திற்கும் பெயர் பெற்ற தமிழகத்தில் எந்த அளவுக்கு ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை நிலை நாட்ட முடியுமோ அந்த அளவுக்கு திருமங்கலம் இடைத்தேர்தலில் நிலைநாட்டியுள்ளனர். ஆகவே இந்த தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே ஒரு குட்டி இடைத்தேர்தலுக்கு கோடிக் கணக்கில் அரசியல் கட்சிகள் பணத்தை கொட்டிய வரலாறு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஓர் சம்பவம்.

இந்த சூறாவளியிலும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு தேமுதிகவிற்கு வாக்களித்துள்ளனர்.

பணம், அதிகாரம், பலாத்காரம் ஆகியவற்றை பயன்படுத்தி கூட்டணிக்கு அரசியல் கட்சிகளையும் சேர்த்துகொண்டு திமுக இந்த இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி வெறும் மாயைதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேர்தல் முடிவு: சரத்குமார் கருத்து
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு
தாக்கத்தை ஏற்படுத்தாத சமத்துவ மக்கள் கட்சி
கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி
திருமங்கலம் இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி!
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...