|
| தேர்தல் முடிவு: சரத்குமார் கருத்து
|
| சென்னை (ஏஜென்சி ), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 16:29 IST ) | |
பணபலத்தால் கிடைத்த இந்த தேர்தல் முடிவுகளை மக்களின் தீர்ப்பாக ஏற்க முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஆயிரம் வாக்குகள் கூட பெறமுடியாமல் படுதோல்வி அடைந்தது.
தேர்தல் முடிவு குறித்து சரத்குமார் கூறியிருப்பதாவது: திருமங்கலம் இடைத்தேர்தலின் முடிவுகள், எங்களை பொருத்தவரை ஒரு முடிவல்ல. எதிர்காலத்தில் ஒரு எழுச்சியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பம்.
இந்த தேர்தல் முடிவு முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. எனினும், எனக்காக சிறப்பாக தேர்தல் பணி செய்த கட்சியினர் அனைவருக்கும் நன்றி.
பண பலத்தாலும், அராஜகத்தாலும், அச்சுறுத்தலாலும் ஏற்பட்ட இந்த முடிவுகளை ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாகவும், ஜனநாயகத்தின் உண்மையான தீர்ப்பாகவும் எடுத்துகொள்ள முடியாது.
தமிழக மக்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றத்தை தரும் வகையில் மவுனப்புரட்சி ஏற்படுத்துவார்கள். அதுவரை சமத்துவ மக்கள் கட்சி அயராது பாடுபடும். இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|