யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தாக்கத்தை ஏற்படுத்தாத சமத்துவ மக்கள் கட்சி
திருமங்கலம் (ஏஜென்சி), 12 ஜனவரி 2009   ( 15:23 IST )
குறுகிய காலத்தில் தனது முதலாவது தேர்தலை சந்தித்த நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, திருமங்கலம் தொகுதி வாக்காளர்களிடம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தேமுதிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'யை நடிகர் சரத்குமார் தொடங்கினார். விஜயகாந்தின் தேமுதிக அளவிற்கு சமத்துவ மக்கள் கட்சி உருவாகும் என்று கருதப்பட்ட நிலையில், தற்போதைய தேர்தல் முடிவால் நடிகர் கார்த்திக்கின் 'நாடாளும் மக்கள் கட்சியின் நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது.

மக்களிடம் தனது கட்சிக்கு உள்ள செல்வாக்கை அளவிடும் ஒரு கருவியாக, திருமங்கலம் தேர்தலை சரத்குமார் கருதி வந்தார். அதன் முடிவுக்காக ஆவலுடன் அவர் காத்திருந்தார்.

ஆனால் தற்போதைய தேர்தல் முடிவு அவருக்கும், அந்த கட்சித் தொண்டர்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. பெண்களிடம் அதிகம் அறிமுகமுள்ள நடிகை ராதிகா வீடு வீடாகப் போய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையிலும், அதனால் எந்த பலனும் உண்டாகவில்லை.

இத்தேர்தலில் ஆயிரம் வாக்கைக் கூட அந்த கட்சி தாண்டவில்லை. இங்கு சுயேட்சையாகப் போட்டியிட்ட சிவசேனா கட்சி வேட்பாளர் கூட 1,129 வாக்குகள் பெற்ற நிலையில், நட்சத்திர அந்தஸ்து பெற்ற சரத்குமார்- ராதிகா ஆகியோரின் தலைமைக்கு வெறும் 831 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இது தொண்டர்களிடம் பெரும் அவ நம்பிக்கையையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.

இதேபோல் விஜயகாந்தின் தேமுதிகவும், இத்தேர்தலில் டெபாசிட் இழந்தது. கடந்த தேர்தலைவிட 6,834 வாக்குகளை அந்த கட்சி குறைவாகப் பெற்றுள்ளது.

பிரதான கட்சியான அதிமுகவும், முன்பு கூட்டணி கட்சியான மதிமுக பெற்ற வாக்குகளை விட 8 சதவீதம் வாக்கை இழந்துள்ளது. இத்தனைக்கும் இடதுசாரிக் கட்சிகள் தற்போது அதிமுக அணிக்கு வந்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு மாறாக பாமக, இடதுசாரிக் கட்சிகள் வெளியேறிய நிலையிலும் திமுகவுக்கு 55 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக, தேமுதிக, சமக கட்சிகளின் வாக்குகள் அனைத்தையும் சேர்த்தால் கூட, திமுகவின் வாக்குகளை நெருங்க முடியவில்லை.

முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதைப் போல் திமுக அரசின் சாதனைகளை திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி
திருமங்கலம் இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி!
நாட்டை காக்கும் உத்தமர்கள்: போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
திருமங்கலம்: திமுக 58,352; அதிமுக-29,009
நெல்லையில் 3 பேர் படுகொலை: பதற்றம்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...