யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 14:24 IST )
இலங்கை விவகாரம் தொடர்பாக ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், முதல்வர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட தலைவர்கள், முதல்வர் கருணாநிதியை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காதது குறித்து முதல்வரிடம் முறையிட்ட அவர்கள், இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் கருணாநிதியிடம் அளித்தனர்.

இலங்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதிப்பதாக, ராமதாஸ் தலைமையிலான குழுவினரிடம் கருணாநிதி உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், '2004 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கையெழுத்திட்டு தான் கூட்டணி அரசில் பங்கேற்றோம். அதில் கூறப்பட்டபடி இலங்கைத் தமிழர் நலனை மத்திய அரசு பாதுகாக்கவில்லை' என்றார்.

இலங்கை பிரச்னை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலை, வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவை தரும் என்று, திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி
திருமங்கலம் இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி!
நாட்டை காக்கும் உத்தமர்கள்: போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
திருமங்கலம்: திமுக 58,352; அதிமுக-29,009
நெல்லையில் 3 பேர் படுகொலை: பதற்றம்
இடைத்தேர்தல்: திமுக 23,254; அதிமுக-10,284
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...