|
| சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம்: கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 14:23 IST ) | |
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி, திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாத தொகுதி ஒன்றில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. இது, திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தான் கூற வேண்டும்.
இந்த வெற்றியைத் தந்த திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கும், திமுகவினருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக கூட்டணியில் பாமக, இடதுசாரிக் கட்சிகள் இடம்பெறாத நிலையில், இடதுசாரி கட்சிகள் அரசை கடுமையாகத் தாக்கிப் பேசிய நிலையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
திருமங்கலம் தொகுதியில் நாங்கள் வெற்றி பெறாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இது என்று வெற்றி பெற்ற கட்சிகள் கூறியிருப்பார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை விட 39,266 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|