யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருமங்கலம் இடைத்தேர்தல்: திமுக அமோக வெற்றி!
மதுரை (ஏஜென்சி), 12 ஜனவரி 2009   ( 12:23 IST )
திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றுள்ளது.திமுக வேட்பாளர் லதா அதியமான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை விட 39,266 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர்.

துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசாரின் பலத்த பாதுகாப்புகளுக்கு த்தியில் நடந்த தேர்தலில் 89 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்குப் பதிவு முடிந்தகும், அண்ணா மருத்துவக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பத்திலிருந்தே திமுக வேட்பாளர் லதா அதியமான் முன்னிலையில் வகித்து வருகிறார். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிகையின் முடிவிலும், லதா அதிகமான அதிக வாக்குவித்தியாசத்தில் முன்னேறி கொண்டிருந்தார்.

காலை 11.30 மணியளவில், தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் திமுக அமோக வெற்றிப் பெற்றது.

திமுக 79,422 வாக்குகளும், அதிமுக 40 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தன. இதனால், திமுக வேட்பாளர் லதா அதியமான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை விட கூடுதலாக 39,266 வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றார்.

தேமுதிக வேட்பாளர் தன பாண்டியன் 13,136 வாக்குகளும், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் 831 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாட்டை காக்கும் உத்தமர்கள்: போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
திருமங்கலம்: திமுக 58,352; அதிமுக-29,009
நெல்லையில் 3 பேர் படுகொலை: பதற்றம்
இடைத்தேர்தல்: திமுக 23,254; அதிமுக-10,284
வாக்கு எண்ணிக்கை துவங்கியது: திமுக முன்னிலை
ஸ்டிரைக் : லாரிகளை அரசே கைப்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...