யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நாட்டை காக்கும் உத்தமர்கள்: போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 12:23 IST )
காவல்துறையினர் நாட்டை பாதுகாக்கும் உத்தமர்களாக திகழ வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகடமியில் பயிற்சி பெற்று வந்த துணை ஆய்வாளர்களுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த அகடமியை துவக்கி வைத்தேன். அப்போது போலீசார் செயல்பட வேண்டிய முறை குறித்து விளக்கினேன்.

தற்போது பயிற்சி முடித்து, பொறுப்புள்ள பணிக்கு அடியெடுத்து வைக்கிறீர்கள். பணியின்போது, அண்ணா வகுத்துக் கொடுத்த கட்சி, சமய சார்பற்ற முறையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் செயல்பட வேண்டும்.

அவ்வாறு செய்தால் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் உத்தமர்களாக விளங்குவீர்கள். இவ்வாறு அவர் கூறினார். பயிற்சியின்போது, சிறந்து விளங்கியவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். அதை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறை மற்றும் அரசுத்துறை பணியாளர்களை முதல்வர் கருணாநிதி பாராட்டினார். அவர்களுக்கும் தலா ரூ.500 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருமங்கலம்: திமுக 58,352; அதிமுக-29,009
நெல்லையில் 3 பேர் படுகொலை: பதற்றம்
இடைத்தேர்தல்: திமுக 23,254; அதிமுக-10,284
வாக்கு எண்ணிக்கை துவங்கியது: திமுக முன்னிலை
ஸ்டிரைக் : லாரிகளை அரசே கைப்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
காஞ்சிபுரத்தில் காலராவால் 7 பேர் பலியா ? அமைச்சர் மறுப்பு
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...