|
| நெல்லையில் 3 பேர் படுகொலை: பதற்றம் |
| நெல்லை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009 ( 09:59 IST ) | |
நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை பேட்டையை அடுத்துள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர்கள் மதன் (30), எஸ்.ஐயப்பன் (36) மற்றும் என்.ஐயப்பன் (32).
இவர்கள் 3 பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மாலை 5 மணியளவில் சுத்தமல்லிக்கு வெளியே ஒரு பிள்ளையார்கோயில் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிந்தனர்.
அப்போது, ஆட்டோ மற்றும் ஒரு பைக்கில் வந்த ஒரு கும்பல், 3 பேரையும் சரமாரியாக வெட்டியது. இதில் இரண்டு ஐயப்பன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தப்பியோடிய மதனையும் அந்த கும்பல் ஓட ஓட வெட்டியது. இதில் அவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் டி.ஐ.ஜி.கண்ணப்பன், கமிஷனர் மஞ்சுநாதா, மாவட்ட எஸ்.பி. அஸ்ராகார்க் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|