யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இடைத்தேர்தல்: திமுக 23,254; அதிமுக-10,284
மதுரை (ஏஜென்சி),, திங்கள்கிழமை, 12 ஜனவரி 2009   ( 09:40 IST )
திருமங்கலம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஆரம்பத்திலிருந்தே திமுக வேட்பாளர் லதா அதியமான் முன்னிலையில் வகித்து வருகிறார்.

மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதாவது காலை 9.05 மணி நிலவரப்படி, திமுக 16,700 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தது, அதிமுக 8,100 வாக்குகள் பெற்று 8,600 வாக்குகள் பின்தங்கி இருந்தது. தேமுதிக 1,772 வாக்குகளும், சமத்துவ மக்கள் கட்சி 74 வாக்குகளும் பெற்றிருந்தது.

அடுத்த 16 நிமிடங்களில் இந்த வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரித்தது. அதன்படி, திமுக 23,254 வாக்குகளும், அதிமுக 10,284 வாக்குகளும் பெற்றிருந்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலில் வாக்கு எண்ணிக்கையின் முழு விபரமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாக்கு எண்ணிக்கை துவங்கியது: திமுக முன்னிலை
ஸ்டிரைக் : லாரிகளை அரசே கைப்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
காஞ்சிபுரத்தில் காலராவால் 7 பேர் பலியா ? அமைச்சர் மறுப்பு
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் : சிலைக்கு ஜெ.மாலை
திருமங்கலம் இடைத்தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை
ராமதாஸ்- வீரமணி- திருமாவளவன் சந்திப்பு
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...