யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருமங்கலம் இடைத்தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை
மதுரை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 ஜனவரி 2009   ( 12:06 IST )
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற டைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருமங்கலம் தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப் பதிவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட சிறுசிறு சலசலப்புகள் தவிர, பெரும்பாலும் தேர்தல் அமைதியாகவே நடந்தது.

இந்நிலையில், மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தாலும், அதன் பின்னரும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அவ்வாறு நின்றிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு , இரவு 7.30 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வாக்குப் பதிவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சராசரியாக 88.89 சதவீதம் அதாவது 89 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,வாக்க்குப் பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி '‌சீ‌ல்' வை‌க்க‌ப்ப‌ட்டு, துணை ராணுவப் படையினரின் உதவியுடன் வாக்குகள் எண்ணப்படும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குக் கொண்டு செ‌ல்ல‌ப்‌ப‌ட்டது. அங்கு, நான்கு அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை காலை வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.மற்ற வெளியாட்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.அதன் பின்னர் மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.பகல் 12 மணிக்குள் வெற்றி - தோல்வி நிலவரம் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராமதாஸ்- வீரமணி- திருமாவளவன் சந்திப்பு
குடிநீரில் நச்சு: காஞ்சிபுரத்தில் 2 பேர் பலி
தியாகராஜ ஆராதனை விழா நாளை தொடக்கம்
செ‌ன்னை‌யி‌ல் 20ஆ‌ம் தே‌தி நர்சிங் கலந்தாய்வு
நாகர்கோவில் : ரயில் நிலைய ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
திருமங்கலம் வாக்குப்பதிவு : நரேஷ் குப்தா திருப்தி
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...