|
| ராமதாஸ்- வீரமணி- திருமாவளவன் சந்திப்பு |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 18:25 IST ) | |
இலங்கை பிரச்னையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளை இணைக்கும் முயற்சியாக ராமதாஸ், கி.வீரமணி, திருமாவளன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இவ்விவகாரத்தில் மத்திய- மாநில அரசுகளை நிர்பந்திப்பது குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.
மேலும், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் 3 தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இலங்கை பிரச்னை தொடர்பாக தங்களின் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் ராமதாஸ், வீரமணி, திருமாவளவன் ஆகியோர் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|