|
| குடிநீரில் நச்சு: காஞ்சிபுரத்தில் 2 பேர் பலி |
| காஞ்சிபுரம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 ஜனவரி 2009 ( 17:23 IST ) | |
காஞ்சிபுரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை பருகிய 2 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியில் இன்று காலை பலருக்கு ஒரே நேரத்தில் வாந்தி, பேதி ஏற்பட்டது. அடுத்தடுத்து பலர் மயங்கி கீழே விழுந்தனர்.
இதையடுத்து, வாந்தி - பேதியால் அவதிப்பட்ட பொது மக்கள் அனைவரும் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
எனினும் ஒரு குழந்தை உட்பட இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சிகிச்சை பெற்று வருவோரில் ஒரு சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, சம்பவம் நடந்த பொய்யாக்குளம் கிராமத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அங்கு சுகாதார நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதே வாந்தி - பேதிக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|