யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சட்டக் கல்லூரி மோதல்: 29 மாணவர்களுக்கு ஜாமீன்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 16:20 IST )
சென்னை சட்டக் கல்லூரி மோதல் தொடர்பான வழக்கில், மாணவர்கள் 29 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களின் இரு பிரிவினரிடையே கடந்த நவம்பர் 12ஆ‌ம் தேதி மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட மாண‌வ‌ர்களை கைது செய்யப்பட்டனர்.

இ‌வ்வழக்கில் கைதான மாணவர்களில் 29 பேர் ஜாமீன் கேட்டு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்தனர். இதேபோல் காவ‌ல்துறை உத‌வி ஆணைய‌ரை தாக்கிய வழக்கில் 11 மாணவர்கள் மு‌ன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்‌தன‌ர்.

இவ்விரு மனுக்களும் உய‌ர்‌நீ‌திம‌ன்ற நீதிபதி டி.சுதந்திரம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் அவர்களது பெற்றோர் உத்தரவாத மனுவை தாக்கல் செய்தனர். அதில், தங்களது மகன்கள் இனி வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து 29 மாணவர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய ‌ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ரூ. 5 ஆயிரம் சொந்த ஜாமீன், அதே தொகைக்கு ஒரு நபர் ஜாமீன் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

மேலும், இம்மாணவர்கள் 4 வாரத்திற்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொது நூலகம் சென்று 2 மணி நேரத்திற்கு புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றும், அவர்கள் படிக்கும் நூல்களின் விவரத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
சங்கரராமன் கொலை வழக்கு: பி.26-ல் சாட்சி விசாரணை
ல‌ா‌ரி ஸ்டிரைக் : பெ‌ட்ரோ‌ல் ப‌ங்கு‌க‌ள் மூட‌ப்படு‌ம் அபாய‌ம்!
தேர்தலில் வெற்றி பெறுவேன்: லதா அதியமான் நம்பிக்கை
இடைத்தேர்தல்: 20 சதவீதம் வாக்குப்பதிவு
சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...