|
| தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் |
| ராமநாதபுரம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009 ( 13:44 IST ) | |
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்றனர். நேற்று மாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தது.
பின்னர், விசாரணை என்ற பெயரில் ராஜ் (30) என்ற மீனவரை இலங்கை கடற்படையினர் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாகப் பேசிய மில்டன், டென்சிங், ஜான் போஸ் என்ற மற்ற மீனவர்களையும் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கினர்.
படுகாயம் அடைந்த நிலையில் தமிழக மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படை விடுவித்தது. அவர்கள் இன்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அனைவரும் தற்போது சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பது ராமேஸ்வரம் மீனவர்கள் இடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|