யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சங்கரராமன் கொலை வழக்கு: பி.26-ல் சாட்சி விசாரணை
புதுச்சேரி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 13:37 IST )
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சார்யார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டு ஆஜராக வேண்டிய 24 பேரில் 17 பேர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதற்கான காரணங்களை விளக்கி அவரவர் தரப்பில் தனித்தனி மனு, வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின், இவ்வழக்கை வரும் பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கிருஷ்ண ராஜா உத்தரவிட்டார்.

பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இவ்வழக்கு தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ல‌ா‌ரி ஸ்டிரைக் : பெ‌ட்ரோ‌ல் ப‌ங்கு‌க‌ள் மூட‌ப்படு‌ம் அபாய‌ம்!
தேர்தலில் வெற்றி பெறுவேன்: லதா அதியமான் நம்பிக்கை
இடைத்தேர்தல்: 20 சதவீதம் வாக்குப்பதிவு
சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது
இலங்கை பிரச்னை: சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று சென்னை வருகை
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...