|
| லாரி ஸ்டிரைக் : பெட்ரோல் பங்குகள் மூடப்படும் அபாயம்! |
| சென்னை (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 12:30 IST ) | |
இன்று 5வது நாளாக நீடிக்கும் டேங்கர் லாரிகள், ஆயில் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பங்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்ததால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக, நேற்று முன்தினத்திலிருந்து டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் குதித்தன. இதனால், சென்னை உள்பட பல்வேறு நகரங்களிலும் கடந்த இரு தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று நள்ளிரவு முதல் பால், தண்ணீர் உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் போராட்டத்தில் குதிக்கவுள்ளன. இதனால் பால் விநியோகமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேஷன் தலைவர் கண்ணன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் உள்ள 3,300 பெட்ரோல் பங்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் நேற்று மூடப்பட்டன. சென்னையில் மட்டும் 150 பெட்ரோல் பங்குகள் இருப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் நீடித்தால், அனைத்து பங்குகளையும் மூடும் அபாயம் ஏற்படும்" என்றார்.
லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 5வது நாளாக நீடிக்கும் நிலையில், மத்திய அரசு இதுவரை தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பு கூறியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|