|
| தேர்தலில் வெற்றி பெறுவேன்: லதா அதியமான் நம்பிக்கை |
| மதுரை (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 11:33 IST ) | |
"திருமங்கலம் இடைத்தேர்தலில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, முதல்வர் கருணாநிதியின் காலடியில் வெற்றிக்கனியை சமர்பிப்பேன்" என்று திமுக வேட்பாளர் லதா அதியமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திமுக வேட்பாளர் லதா அதியமான் இன்று காலை அல்-அமீன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தலில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவேன்; முதல்வர் கருணாநிதியின் காலடியில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்பேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதே வாக்குச்சாவடியில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபனும் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தேர்தல் அமைதியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க, தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கும் நேரில் சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சீத்தாராமன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரும் ஓட்டுப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவின் போது, கள்ளஓட்டுப்போடுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முறையான ஆவணங்களுடன் வருபவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். குடும்ப அட்டை மட்டும் கொண்டுவரும் வாக்காளர்கள், ஓட்டுப்போட அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, திருமங்கலம் தொகுதியில் தங்க்கியிருந்த வாக்காளர் அல்லாத 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரம் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|