யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இடைத்தேர்தல்: 20 சதவீதம் வாக்குப்பதிவு
மதுரை (ஏஜென்சி), 9 ஜனவரி 2009   ( 11:14 IST )
திருமங்கலம் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் 3 மணி நேரத்தில் 20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 9 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்தலில், மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 பேர் வாக்களிக்கின்றனர். இதில் 78 ஆயிரத்து 920 பேர் பெண்கள்.

மொத்தமுள்ள 190 வாக்குச் சாவடிகளில் 33 கிராமங்களில் உள்ள 110 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இடையே பலத்தப் போட்டி நிலவுகிறது. விஜயகாந்தின் தேமுதிக சார்பில் தனபாண்டியன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் ஆகியோர் உள்பட மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி நிலவரப்படி 20 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

த‌மிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாக சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ல‌ா‌ரி ஸ்டிரைக் : பெ‌ட்ரோ‌ல் ப‌ங்கு‌க‌ள் மூட‌ப்படு‌ம் அபாய‌ம்!
சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது
இலங்கை பிரச்னை: சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று சென்னை வருகை
திருமங்கலத்தில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு
இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்‌ ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி உ‌ண்ணா‌விர‌தம்: பா.ஜ.
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...