யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 11:01 IST )
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேவுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 32-வது புத்தகக் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது.

இந்த கண்காட்சியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தொடங்கி வைத்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதைத் தொடங்கி வைப்பதாக இருந்தது. உடல்நலக் குறைவால் அவர் பங்கேற்கவில்லை. எனினும் அவரது உரை விழாவில் வாசிக்கப்பட்டது.

இந்த விழாவில் எழுத்தாளர்கள் சி.மணி (கவிதை), ஆர்.சூடாமணி (சிறுகதை-நாவல்), ந.முத்துசாமி (நாடகம்), பேராசிரியர் நெடுஞ்செழியன் (கட்டுரை), கிரிஷ் கர்னாட் (கன்னட இலக்கியம்), எஸ்.முத்தையா (ஆங்கிலம்) ஆகிய 6 பேருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' விருது வழங்கப்பட்டது. இது, ரூ.1 லட்சம் ரொக்கம், பொற்கிழி, பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டது.

புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, திருப்பூர் கிருஷ்ணன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை பிரச்னை: சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று சென்னை வருகை
திருமங்கலத்தில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு
இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்‌ ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி உ‌ண்ணா‌விர‌தம்: பா.ஜ.
திருமங்கலத்தில் நாளை வாக்குப்பதிவு
தமிழகத்தில் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...