யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை பிரச்னை: சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 09:53 IST )
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தலையிட வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தபோது, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை பிரணாப் முகர்ஜியை இலங்கைக்குச் செல்லவில்லை. தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.முல்லைத் தீவில் பெருமளவில் உயிரிழப்பைத் தடுப்பதற்கு, முறையிடுவதற்கான கடைசிப் புகலிடமாக உங்களை அணுகியிருக்கிறேன்.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட, நீங்கள் தலையிட வேண்டும். இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பேச்சு நடத்த ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்கு நீங்கள் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று சென்னை வருகை
திருமங்கலத்தில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு
இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்‌ ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி உ‌ண்ணா‌விர‌தம்: பா.ஜ.
திருமங்கலத்தில் நாளை வாக்குப்பதிவு
தமிழகத்தில் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு
சேது திட்டத்தை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...