யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருமங்கலத்தில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு
திருமங்கலம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2009   ( 08:44 IST )
பலத்த பாதுகாப்புடன் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பல இடங்களில் மக்கள் ஆர்வதுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப் பேரவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது. பல இடங்களில் மக்கள் ஆர்வமுடன் காலை 6.00 மணி முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கக் காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிக்குட்பட்ட 190 வாக்குச் சாவடிகளில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவிதமான தகாத சம்பவங்களும் நடந்ததாகத் தகவலில்லை.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 9 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தேர்தலில், 78 ஆயிரத்து 920 பெண்கள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 190 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 33 கிராமங்களைச் சேர்ந்த 110 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் லதா அதியமான் (திமுக), முத்து ராமலிங்கம் (அதிமுக), தனபாண்டியன் (தேமுதிக ), பத்மநாபன் (சமத்துவ மக்கள் கட்சி) உட்பட மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர்.

பாதுகாப்பு பணிகளை 8 கம்பெனி துணை ராணுவப் படையும், 4 கம்பெனி சி.பி.ஆர்.எப். வீரர்களும், 2700 தமிழ்நாடு காவல் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இல‌ங்கை‌யி‌ல் போ‌ர்‌ ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி உ‌ண்ணா‌விர‌தம்: பா.ஜ.
திருமங்கலத்தில் நாளை வாக்குப்பதிவு
தமிழகத்தில் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு
சேது திட்டத்தை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
திருமங்கலத்திலிருந்து அழகிரி ஆட்களை வெளியேற்றவும்: ஜெ.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடியா ? : கருணாநிதி விளக்கம்
செய்திகள்
வணிகம் செய்திகள் - நிதி மோசடியை ஒப்புக்கொண்டு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...