யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருமங்கலத்தில் நாளை வாக்குப்பதிவு
திருமங்கலம் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 17:00 IST )
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் திருமங்கலம் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வீர.இளவரசன் (மதிமுக) மறைந்ததையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.

இத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் லதா அதியமான்,அதிமுக சார்பில் முத்து ராமலிங்கம், தேமுதிக சார்பில் தனபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உட்பட மொத்தம் 36 பேர் களத்தில் உள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து திருமங்கலம் தொகுதியில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இத்தேர்தலில், 78 ஆயிரத்து 920 பெண்கள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 190 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 33 கிராமங்களைச் சேர்ந்த 110 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தேர்தல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 9 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 8 கம்பெனி துணை ராணுவப் படையும், 4 கம்பெனி சி.பி.ஆர்.எப். வீரர்களும், 2700 தமிழ்நாடு காவல் துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழகத்தில் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு
சேது திட்டத்தை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
திருமங்கலத்திலிருந்து அழகிரி ஆட்களை வெளியேற்றவும்: ஜெ.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடியா ? : கருணாநிதி விளக்கம்
பிரதமருக்கு கருப்புக் கொடி: நெடுமாறன் கைது
விரைவில் இலங்கை செல்வார் பிரணாப்: பிரதமர் உறுதி
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...