|
| தமிழகத்தில் பெட்ரோல்- டீசலுக்கு தட்டுப்பாடு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 16:59 IST ) | |
லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், சென்னை உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் - டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சுமார் 1200 பெட்ரோல் பங்குகளுக்கு நாள்தோறும் 900-க்கும் அதிகமான டேங்கர் லாரிகளில் பெட்ரோல் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதைய வேலை நிறுத்தத்தால் 50 டேங்கர் லாரிகளில் மட்டுமே பெட்ரோல் - டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் நகரில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் கையிருப்பு அளவு குறைந்து, நேற்று பிற்பகல் முதல் மூடப்பட்டு வருகின்றன. பெட்ரோல் வினியோகம் செய்யப்பட்டு வந்த மற்ற இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் எரிபொருளை நிரப்பும் நிலை உருவாகியுள்ளது.
இதே நிலை தான் சேலம், கோவை, திருச்சி, மதுரை, கடலூர், ஈரோடு, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில், இன்று மாலைக்குப் பின் நிலைமை மேலும் மோசமாகும் என்று பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|