யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சேது திட்டத்தை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 15:03 IST )
சேது சமுத்திரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் உறுதியுடன் நின்று ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ. 1600 கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் 19 கி.மீ. நீளமுள்ள விரைவு சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரவாயலில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியில் சென்னை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பறக்கும் சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பதவியேற்ற ஒரு மாதத்தில் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

தமிழக அரசு சார்பில் முன் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி தற்போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது.

மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே இணைப்புப் பாலம் இருப்பதால் தான் இங்கு பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும்படி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வேண்டுகோள் விடுத்தேன். இப்போதும் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் எதிர்கால வாழ்விற்கு புதையலாக உள்ள அந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, உறுதியுடன் பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருமங்கலத்திலிருந்து அழகிரி ஆட்களை வெளியேற்றவும்: ஜெ.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடியா ? : கருணாநிதி விளக்கம்
பிரதமருக்கு கருப்புக் கொடி: நெடுமாறன் கைது
விரைவில் இலங்கை செல்வார் பிரணாப்: பிரதமர் உறுதி
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை
சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...