|
| திருமங்கலத்திலிருந்து அழகிரி ஆட்களை வெளியேற்றவும்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 12:32 IST ) | |
தேர்தல் விதிமுறையை மீறி, திருமங்கலம் தொகுதியில் தங்கியிருக்கும் மு.க.அழகிரியின் ஆட்களை வெளியேற்றும்படி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி, வாக்காளர் அல்லாதவர்கள் நேற்று மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தேர்தல் விதி.
அதன்படி அதிமுக கூட்டணியை சேர்ந்த அனைவரும் நேற்று மாலை 5 மணிக்கு திருமங்கலம் தொகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால், மு.க.அழகிரியின் ஆட்கள் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் திருமங்கலம் தொகுதியில் இன்னும் தங்கியிருப்பதாகவும், வாக்காளர்களை மிரட்டும் வகையில் வீதி உலா வந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே, நாளை நடைபெறவுள்ள தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, வாக்காளர் அல்லாத அனைவரையும் திருமங்கலம் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|