|
| பிரதமருக்கு கருப்புக் கொடி: நெடுமாறன் கைது |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009 ( 12:02 IST ) | |
சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட 500 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; இலங்கைக்கு இந்திய அரசு உதவி செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.
ஆனால் இவ்விஷயத்தில் மத்திய இதுவரை எந்த ஆர்வமும் காட்டாமல், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இவ்வாறு இலங்கை அரசுக்கு துணை நிற்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, சென்னை வரும் போது கருப்புக் கொடி காட்டப்படும் என்று பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே கருப்புக் கொடியுடன் நின்று கொண்டிருந்தனர்.
பிரதமரின் கார் மறைமலையடிகள் பாலம் அருகே வந்தபோது பிரதமருக்கு எதிராக அவர்கள் ஆவேசத்துடன் கோஷங்கள் எழுப்பி கருப்புக் கொடி காட்டினர்.
இதையடுத்து பழ. நெடுமாறன் உட்பட சுமார் 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|