யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விரைவில் இலங்கை செல்வார் பிரணாப்: பிரதமர் உறுதி
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 ஜனவரி 2009   ( 11:50 IST )
விரைவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று, முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் உறுதியளித்து‌ள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை ஆளுந‌ர் மாளிகையில் நேற்றிரவு பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதன் இறுதியில் இலங்கைப் பிரச்சனை குறித்து பிரதமரிடம் முதல்வர் விவாதித்தார். மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி வெளியுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவது குறித்து கருணாநிதி பேசினார்.

முதல்வர் கருணாநிதியின் உணர்வை புரிந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் அப்போது உறுதியளித்தார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை
சென்னையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
அவதூறு பிரச்சாரம்: ஜெ.வுக்கு நோட்டீஸ்
மழை நிவாரணம் ரூ. 1000 கோடி தேவை: கருணாநிதி
ஓட்டுச்சாவடிகளில் வீடியோப்பதிவு : நரேஷ்குப்தா
மன்மோகன் உருவ பொம்மை எரிப்பு: 30 பேர் கைது
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...